

கேரளத்தில் போலீஸாருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட மாவோயிஸ்ட்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால் கோவை மருத்துவ மனைகளை போலீஸார் கண் காணித்து வருகிறார்கள்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 17-ம் தேதி மாவோயிஸ்ட் அமைப் பினருக்கும் - கேரள போலீஸா ருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் ஈடு பட்டு தப்பிச் சென்றதாக கூறப்படும் அட்டப்பாடியை சேர்ந்த ஐயப்பன், வயநாட்டை சேர்ந்த சோமன் ஆகிய இருவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனிடையே, துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது மாவோயிஸ்ட் கள் சிலர் காயமடைந்ததாக கேரள போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள் ளார்களா என்பதை அறிந்துகொள்ள கோவையில் உள்ள மருத்துவ மனைகளை போலீஸார் கண் காணித்து வருகிறார்கள்.
மருத்துவமனைகளில் காயம் காரணமாக அனுமதிக்கப்பட்ட வர்களின் விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். காயம் காரணமாக எவரேனும் அனுமதிக்கப்பட்டால் போலீஸா ருக்கு தகவல் கொடுக்குமாறு மருத்துவமனைகளுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, கோடநாட்டில் தங்கியுள்ள நேரத்தில் மாவோயிஸ்ட் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதால் கோவை, நீலகிரி மாவட்ட வன எல்லைகளில் வனத்துறையினருடன் இணைந்து போலீஸார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் கூறும்போது, “கோவை மாவட்ட எல்லையில் உள்ள 10 சோதனைச் சாவடிகளிலும், வனப் பகுதிகளிலும் கூடுதல் படையைக் கொண்டு சோதனை நடந்து வருகிறது.
காயம் அடைந்த மாவோயிஸ்ட் கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்களா என்பது குறித்து அறிய அங்கும் விசாரணை நடந்து வருகிறது. தமிழக - கேரள எல்லையில் போலீஸார் உஷார் நிலையில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.
முதல்வர் ஜெயலலிதா கோடநாட்டில் தங்கியுள்ள நேரத்தில் இத்தாக்குதல் நடந்துள்ளதால் மாவட்ட வன எல்லைகளில் வனத்துறையினருடன் இணைந்து போலீஸார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.