

மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிடக் கோரி காரைக்கால் தலைமை தபால் நிலையம் எதிரில் மின்துறை ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார்மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மின்துறை ஊழியர்கள் பலகட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மின்துறையைத் தனியார்மயமாக்கும் முடிவை கைவிடக் கோரியும், மத்திய அரசின் இம்முடிவுக்குக் கண்டனம் தெரிவித்தும், காரைக்கால் தலைமை தபால் நிலையம் முன்பு காரைக்கால் மாவட்ட மின்துறை ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று (அக். 22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்குத் தனியார்மய எதிர்ப்பு போராட்டக் குழு நிர்வாகிகள் வேலுமயில், பழனி ஆகியோர் தலைமை வகித்தனர்.