ஏற்காடு ஏரியில் ரூ.48 லட்சம் மதிப்பில் படகு துறை சீரமைப்பு பணி

ஏற்காடு படகுத் துறையில் ரூ.48 லட்சம் மதிப்பில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.  இதில், பணி நிறைவடையும் நிலையில் உள்ள பயணிகள்நடைமேடை பகுதி.
ஏற்காடு படகுத் துறையில் ரூ.48 லட்சம் மதிப்பில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், பணி நிறைவடையும் நிலையில் உள்ள பயணிகள்நடைமேடை பகுதி.
Updated on
1 min read

ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள ஏரியில் கூடுதல் படகுகளை நிறுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் ரூ.48 லட்சம் மதிப்பில் படகுத் துறை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக ஏற்காடு படகுத்துறை மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:

ஏற்காடு ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ வசதியாக 55 படகுகள் தற்போது உள்ளன. படகுகளை நிறுத்தி வைக்கவும், அவற்றில் பயணிகள் ஏறி, இறங்கவும் வசதியாக, படகுத்துறையை ரூ.48 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

படகுத்துறையில் கூடுதல் பயணிகள் நிற்க வசதியாக 6 நடைமேடைகளுடன் கூடிய படகு நிறுத்துமிடங்கள் அமைக்கப்படுகின்றன.

மேலும், படகுத்துறை நடைமேடையின் தரைத் தளத்தை அழகுபடுத்துவது, மழை மற்றும் வெயிலால் பயணிகள் பாதிக்கப்படாமல் இருக்க நிழற்கூடம் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஏற்காடு ஏரியில் 6 மாதத்துக்கும் மேலாக படகு சவாரி நிறுத்தப்பட்ட நிலையில், ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in