32 மாவட்டங்களின் தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

32 மாவட்டங்களின் தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை
Updated on
1 min read

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக 32 மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளர்களுடன் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ள திமுக, கடந்த மார்ச் 11-ம் தேதி முதல் தேர்தல் நிதி வசூலித்து வருகிறது. கடந்த ஜூலை 24-ம் தேதி வாக்குச் சாவடி முகவர்களின் தேர்தல் பணிகளை முறைப்படுத்த 17 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவையும், ஜூலை 27-ம் தேதி தேர்தல் அறிக்கை தயாரிக்க டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த 22-ம் தேதி 32 மாவட்டங்களுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக் கப்பட்டனர். இவர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் நேற்று ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அரசை எதிர்த்து..

உள்ளூர் பிரச்சினைகளுக்காக அந்தந்த பகுதிகளில் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல், அரசு அலுவலகங் கள் முற்றுகை போன்ற போராட் டங்களை நடத்த வேண்டும். இதில் வாக்குச் சாவடி முகவர்கள், வாக்குச் சாவடி குழு உறுப்பினர் களையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். இந்தப் பணிகள் அனைத்தையும் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுடன் இணைந்து ஒற்றுமையுடன் செய லாற்ற வேண்டும் என பொறுப் பாளர்களிடம் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.

திமுக மகளிரணி கூட்டம்

அண்ணா அறிவாலயத்தில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவரும், மகளிரணிச் செயலா ளருமான கனிமொழி தலைமையில் மகளிரணி கூட்டம் நடைபெற்றது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு எவ்வாறு பணியாற்றலாம் என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் கனிமொழி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in