Published : 22 Oct 2020 06:48 AM
Last Updated : 22 Oct 2020 06:48 AM

நெல்லை, கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி திருநெல்வேலி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

காந்திதாமில் இருந்து வரும் 26, நவ.2, 9, 16, 20, 23-ம் தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (09424) அடுத்த 3 நாளில் திருநெல்வேலிக்கு செல்லும்.

மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து நவ.5, 12, 19, 26 டிச.3-ம் தேதிகளில் காலை 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (09423) அடுத்த 3-வது நாள் காலை 7.45 மணிக்கு காந்திதாம் செல்லும்.

இதேபோல், ஜபால்பூர் - கோயம்புத்தூர் இடையே வரும் 24-ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு (02198/02197) ரயில்களும், ஹவுரா - யஸ்வந்த்பூர் இடையே வரும் 24-ம் தேதி முதல் தினசரி சிறப்பு ரயில்களும், யஸ்வந்த்பூர் - ஹவுரா இடையே வரும் 28-ம்தேதி முதல் வாராந்திர ஏசி சிறப்பு ரயில்களும் (02864 /02863) இயக்கப்படவுள்ளன.

சென்னை சென்ட்ரல் வழியாக...

தர்பாங்கா - மைசூர் இடையே சென்னை சென்ட்ரல் வழியாக வரும் 24-ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில்களும் (02577/02578), பாடலிபுத்ரா - யஸ்வந்த்பூர் இடையே சென்னை சென்ட்ரல்வழியாக வரும் 23-ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில்களும் (03251/03252) இயக்கப்படவுள்ளன.

மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

இவ்வாறு தெற்கு ரயில்வேவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x