

66 குண்டுகள் முழங்க தேனியில் காவலர் வீரவணக்க நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
லடாக் பகுதியில் கடந்த 1959-ம் ஆண்டு சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப்படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகங்களை போற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
இதனையடுத்து இன்று தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய் சரண் தேஜஸ்வி ஆகியோர் உயிர்நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
அவர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் மலர்வளையம் வைத்து 66குண்டுகள்முழங்கப்பட்டது.
தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பணியின்போது வீர மரணம் அடைந்த 5 காவலர்களை நினைவு கூறும் வகையில் அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண்தேஜஸ்வி திறந்து வைத்தார்.
காவலர்களின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.