நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: நிதி ஆதாரங்களை இறுதி செய்ய ஜெர்மன் அதிகாரிகள் இன்று வருகை

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: நிதி ஆதாரங்களை இறுதி செய்ய ஜெர்மன் அதிகாரிகள் இன்று வருகை
Updated on
1 min read

நெம்மேலியில் தொடங்கப்படவுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கான நிதி ஆதாரங்களை இறுதி செய்வதற்காக ஜெர்மன் அரசு நிதி நிறுவன ஆய்வுக் குழு இன்று சென்னை வருகிறது.

சென்னையில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் நெம்மேலி யில் கடல்நீரை குடிநீராக்கி 150 மில்லியன் லிட்டர் பெறுவதற்கான திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது. இத்திட்டத்துக் கான நிதி ஆதாரங்கள் வழங்குவது தொடர்பாக கலந்தாலோசிக்க ஜெர்மன் அரசு நிதி நிறுவன அதிகாரிகள் இன்று சென்னை வருகின்றனர்.

நெம்மேலியில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. தற்போது மேலும் 150 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறுவதற்காக ரூ.1,371.86 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரி வித்ததாவது:

சென்னையை அடுத்த நெம் மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்துக்கு தேவையான நிதி உதவியை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற் கொள்ளும்படி மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இத்திட்டத்துக்கான பரிந்துரையை மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை ஜெர்மன் அரசு நிதி நிறுவனத் துக்கு கடந்த வாரம் அனுப்பி யுள்ளது.

நெம்மேலியில் கடல்நீரை உள்வாங்கும் தொட்டியில் நக ரும் வடிகட்டிகள், முதல்நிலை சுத்திகரிப்புப் பகுதியில் தட்ட டுக்கு வடிகட்டும் தொட்டி, கரைந்து காற்றில் மிதக்கும் பொருட்களை வடிகட்டும் தொட்டி உள்ளிட்ட அமைப்புகளும் நிறுவப்பட வுள்ளது. இதன்மூலம் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை இந்திய தர நிறுவனத்தின் அளவு கோலின்படி குடிநீராக்கும் வகையில், சமன் படுத்தத் தேவையான சுத்திகரிப்பு அமைப்பு களும் நிறுவப்பட வுள்ளது.

இந்த நிலையத்தை பணி ஆணை வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 மாதங்களுக்குள் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இத னால், சென்னை மாநகரின் மத்திய மற்றும் தென்சென்னை பகுதி யில் சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்திருக்கும் தகவல் தொழில் நுட்ப மையங்கள், தொழிற் சாலைகள், வேளச்சேரி, மடிப் பாக்கம், உள்ளகரம் - புழுதி வாக்கம், புனித தோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மயி லாப்பூர் மற்றும் ஆலந்தூர் பகுதிகளில் வசிக்கும் சுமார் 9 லட்சம் மக்கள் பயன்பெறுவர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in