

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வடதமிழக மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, ‘‘மத்திய வங்கக் கடல் பகுதியில்உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில்சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
வடதமிழகத்தில் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் வட கடலோரப் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும்.
சென்னை, புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
23-ம் தேதி வரை மத்திய வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிமீவேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண் டாம்’’ என்றார்.