Published : 21 Oct 2020 07:03 AM
Last Updated : 21 Oct 2020 07:03 AM

தேர்தலில் மக்கள் பங்களிப்பை அதிகரிக்க விழிப்புணர்வு ஆன்லைன் விநாடி-வினா போட்டி: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு

சென்னை

சட்டப்பேரவை தேர்தலில் மக்கள்பங்களிப்பை அதிகரிக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் ஆன்லைன் விநாடி-வினா போட்டி நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக தமிழகதலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

‘வாக்காளர், தேர்தல் நடைமுறையில் பங்கேற்க முறையான அறிவூட்டல்’ (ஸ்வீப்) என்ற திட்டத்தின் ஒருபகுதியாக, தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் சார்பில் மாநில அளவிலான ஆன்லைன் விநாடி-வினா போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம்.

இப்போட்டி ‘கோல் க்விஸ் ஸ்போர்ட்ஸ்’ என்ற யூடியூப் தளத்தில் நடத்தப்படும். முதல் நிலைபோட்டி 3 சுற்றுகளாக நடத்தப்படும்.வரும் அக்.25-ம் தேதி மாலை 4மணிக்கு முதல் சுற்றும், 26-ம் தேதிகாலை 11 மணிக்கு 2-வது சுற்றும், அன்று மாலை 4 மணிக்கு 3-வது சுற்று போட்டியும் நடைபெறும்.

இதில் 36 குழுக்கள் அரையிறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்படும். அரையிறுதி, இறுதி சுற்றுகள்வார இறுதியில் நடத்தப்படும். தேர்தல் மற்றும் பொது அறிவு சார்ந்து தலா 50% கேள்விகள் அமையும். முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-ம்பரிசாக ரூ.25 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். முதல்நிலை, அரையிறுதிப் போட்டியில் சரியான பதில் அளிப்பவர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x