

திருவண்ணாமலை மாவட் டத்தில் செங்கம் அருகே லாரி கிளீனர் ஒருவர் மரணம் தொடர்பாக நடந்த சாலை மறியலின்போது டி.எஸ்.பி உட்பட போலீஸாரைத் தாக்கிய வழக்கில் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட் டம் தண்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி கிளீனர் ராம மூர்த்தி. இவர், லாரியில் இருந்து தவறி விழுந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தவர் கடந்த 21-ம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில், கிளீனர் ராமமூர்த்தி குடித்துவிட்டு லாரியில் தூங்கும்போது கீழே விழுந்து மரணம் அடைந்ததாக புதுச்சேரி போலீஸார் வழக்கு பதிவு செய்ததாக, லாரி கிளீனர் ராமமூர்த்தியின் உறவி னர்களுக்கு தகவல் கிடைத் தது. இதனால் ஆத்திரம் அடைந்த ராமமூர்த்தியின் உறவினர்கள் செங்கம் - பெங்களூரு சாலை யில் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும், நஷ்ட ஈடு பெறும் வகையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ராமமூர்த்தியின் உறவினர் பெண்கள் தீக்குளிக்க முயன் றனர். தீக்குளிக்க முயற்சித்த பெண்களை போலீஸார் தாக் கியதாக கூறப்படுகிறது. இத னால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், டிஎஸ்பி சுந்தர மூர்த்தி உள்ளிட்ட போலீஸா ரைத் தாக்கினர்.
இதையடுத்து, எஸ்பி பொன்னி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக் குச் சென்று, மறியலில் ஈடுபட் டவர்களை தடியடி நடத்தி விரட் டினர். இதுகுறித்து மேல்செங் கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து 8 பெண்கள் உட்பட 12 பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். மேலும், பலரை தேடி வந்தனர். அவர்களில் செல்வராஜ், ராஜாமணி உட்பட 7 பேரை நேற்று கைது செய்தனர். தண் டம்பட்டு பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட் டுள்ளனர்.