ஆட்சியர் பெயரில் போலி இமெயில்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே, அரசு அதிகாரிகளிடம் துறை ரீதியாக சந்தேகமும் விளக்கமும் கேட்பதற்காக தனது அலுவலக மெயில் ஐடியில் இருந்து மெயில் அனுப்புவது வழக்கம். கடந்த சில நாட்களாக அரசுத் துறை உயர் அதிகாரிகளுக்கு துறை ரீதியாக சில தகவல்கள் கேட்டு ஆட்சியரின் மெயில் ஐடி போன்ற, மற்றொரு மெயில்ஐடியில் இருந்து மெயில் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்துஆட்சியர் கேள்வி கேட்பதாகநினைத்து, சில அதிகாரிகள்முக்கிய தகவல்களை அந்தபோலி இ-மெயிலுக்கு அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையில், சில அரசுஅதிகாரிகள் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரடியாக வந்து,அவரது நேர்முக உதவியாளரிடம், இவ்வாறு அனுப்பப்பட்ட மெயிலுக்கு பதில் அளிக்க வேண்டுமா? அல்லது ஆட்சியரின் பழைய மெயிலுக்கு பதில் அனுப்ப வேண்டுமா? என்று கேட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்தஆட்சியரின் நேர்முக உதவியாளர், அப்படி எந்த மெயிலும் ஆட்சியரிடம் இருந்து அனுப்பப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் ஏதோ சமூக விரோத கும்பல், ஆட்சியரின் மெயில் ஐடி போன்ற, மற்றொரு மெயில் ஐடியை பயன்படுத்தி, அரசின் முக்கிய தகவல்களைத் திருடியது தெரியவந்தது.

நேசமணி நகர், சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in