

இளையான்குடி அருகே திரு வள்ளூரைச் சேர்ந்த கணேசன் மனைவி அமிர்தம்(60). மாற்றுத் திறனாளியான இவர், ரூ.1,000 உதவித் தொகை பெற்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே வாரச் சந்தைக்கு காய்கறி வாங்க வந்தார். அங்கு வந்த ஆண் மாற்றுத் திறனாளி ஒருவர், மூதாட்டியிடம் உதவித் தொகை ரூ.1.500 ஆக உயர்த்தப் பட்டுள்ளதாகவும், அதைப் பெற வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்றதும், கழுத்தில் நகை அணிந்திருந்தால் மனுவை வாங்க மாட்டார்கள் என அந்த நபர் மூதாட்டியிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து 3 பவுன் செயினை அந்த நபரிடம் மூதாட்டி கொடுத்துள்ளார்.அந்த நபர் நகையுடன் தப்பி ஓடினார்.