கடலூர் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டங்களில் நீட் தேர்வில் அரசு நிதி உதவி பள்ளி மாணவர்கள் 124 பேர் தேர்ச்சி

கடலூர் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டங்களில் நீட் தேர்வில் அரசு நிதி உதவி பள்ளி மாணவர்கள் 124 பேர் தேர்ச்சி

Published on

கடலூர்,விழுப்புரம் மாவட்டங்களில் அரசு, அரசு நிதி உதவிப்பெறும் பள்ளிகளிலிருந்து நீட் தேர்வினை எழுதும் மாணவ, மாணவிகளுக்காக 31 இடங்களில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் இப்பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்களில், அரசுப் பள்ளிகளில் இருந்து 27 பேரும், அரசு நிதி உதவிப் பள்ளிகளில் இருந்து 39 பேரும் உட்பட மொத்தம் 66 பேர் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

இதேபோன்று ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் இப்பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்களில், அரசுப் பள்ளிகளில் இருந்து 52 பே்ரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 6 பேரும் உட்பட 58 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இடஒதுக்கீடுக்காக காத்திருப்பு

தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் குறித்த விவரம் கல்வித்துறைக்கு கிடைக்கவில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு அமல் படுத்தப்பட்டால், இவர்களுக்கு கூடுதல் இடங்களில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in