

கண்கவர் ஓவியங்களுடன் இறக்குமதி செய்யப்பட்ட காய்கறி மையால், 200 ஆண்டுகள் அழியாத தன்மை கொண்ட முதல்தர காகிதத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது பகவத்கீதை நூல்.
புகழ்பெற்ற நைட்டிங்கேல் நிறுவனத்தின் ஓர் அங்கமான வேதிக் காஸ்மாஸ் மூலம் சிறப்புமிக்க இந்த நூல் உருவாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம், கீழத்திருத்தங்கலில் உள்ள அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்ரீனிவாஸ் பைன் ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் அச்சகத்தில் 13.7 அங்குலம் நீளம், 10.8 அங்குலம் அகலத்துடன் 672 பக்கங்களுடன் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மகாபாரத யுத்தத்தில் அர்ஜுன ருக்கு ஸ்ரீகிருஷ்ணர் அளித்த கீதை எனப்படும் உபதேசம் இப்புத்தகத் தில் 18 அத்தியாயங்களாக சிறந்த வேத வல்லுநர்களைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காய்கறி மை கொண்டு ஆப்-செட் மூலம் இப்புத்தகம் ஆங்கிலத்திலும், இந்தியிலும் அச்சிடப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.
அத்துடன் புகழ்பெற்ற ஓவியர் ஜி.எல்.என். சிம்ஹா வரைந்த 150-க்கும் மேற்பட்ட கண்கவர் ஓவியங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அதில், பாரத போர் காட்சிகள், ஸ்ரீகிருஷ்ணரின் கீதை உபதேசக் காட்சி, அவரது விஸ்வரூப தரிசனம் போன்றவை தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. இது நூலுக்கு மேலும் மெருகூட்டு கிறது. இந்த ஓவியங்கள் அனைத் துக்கும் இந்த நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளது.
இப்புத்தகம் அச்சிடப் பயன் படுத்தியுள்ள உயர்ரக காகிதங்கள் எப்.எஸ்.சி. சான்றிதழ் பெற்று ஐரோப்பாவில் இருந்து இறக்கு மதி செய்யப்பட்டவை. மேலும் இக்காகிதங்கள் அமிலக் கலப்பு இல்லாதவை. புத்தகத்தை வாசிப் பவர் படிக்க வேண்டிய பக் கத்தை குறிக்கப் பயன்படும் ‘மார்க் கர்’ மெட்டலில் தங்க மெருகூட் டிய மயிலிறகு போன்று வடிவமைக் கப்பட்டுள்ளதும் மற்றொரு சிறப்பு. இதுவும் இறக்குமதி செய்யப்பட் டது. புத்தகத்தின் நான்கு மூலை யிலும் ‘கோல்டன் கிளிப்’ பொருத்தப் பட்டுள்ளதோடு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை, சிவப்பு வண்ண கற்கள் பதிக்கப்பட்டுள்ளதும் கூடுதல் அழ கூட்டுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இப்புத் தகத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக் கது. ரூ.38,750 விலை கொண்ட இந்த நூலை பாதுகாப்பாக வைப் பதற்காக அழகிய வேலைப்பாடுகள் கொண்ட பெட்டியும், நூலை வைத்துப் படிக்க வசதியாக 360 டிகிரி சுழலும் வகையிலான ஸ்டாண்ட் ஒன்றும் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து ஸ்ரீனிவாஸ் பைன் ஆர்ட்ஸ் நிர்வாகிகள் கூறியபோது, வெளி மாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இப்புத்தகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தியில் மட்டும் அச்சிடப்பட்டுள்ள பகவத்கீதை புத்தகத்தை பிராந்திய மொழிகளில் அச்சிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.