Published : 19 Oct 2020 05:41 PM
Last Updated : 19 Oct 2020 05:41 PM

மத்திய வங்கக்கடல் பகுதியில் நாளை உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை

வளிமண்டலச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

“வளிமண்டலச் சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், அரியலூர், புதுவைப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:

சிவகாசி (விருதுநகர்) 7 செ.மீ., மலையூர் (புதுக்கோட்டை) 6 செ.மீ., திருமயம் (புதுக்கோட்டை) 5 செ.மீ., குடுமியான்மலை (புதுக்கோட்டை), கலெக்டர் ஆபீஸ் திருப்பூர் (திருப்பூர்) தலா 4 செ.மீ., துறையூர் (திருச்சி), மானாமதுரை (சிவகங்கை), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), மேட்டுப்பட்டி (மதுரை), திருப்பத்தூர், திருபுவனம் (சிவகங்கை), பொன்னேரி (திருவள்ளூர்), திருப்பட்டூர், திருப்பூர், நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை) தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

பொன்னமராவதி (புதுக்கோட்டை), டிஜிபி அலுவலகம் (சென்னை), நெடுங்கால் (கிருஷ்ணகிரி), செங்குன்றம் (திருவள்ளூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), இலுப்பூர் (புதுக்கோட்டை), ஓமலூர் (சேலம்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), சோழவரம் (திருவள்ளூர்), ராசிபுரம் (நாமக்கல்), மருங்காபுரி (திருச்சி), அரிமளம் (புதுக்கோட்டை), மேட்டூர் (சேலம்), சிட்டம்பட்டி (மதுரை), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), ராயகோட்டை (கிருஷ்ணகிரி), ஏற்காடு (சேலம்), தஞ்சாவூர், இளையான்குடி (சிவகங்கை), மணப்பாறை ( திருச்சி), பெரம்பூர் (சென்னை), அறந்தாங்கி (புதுக்கோட்டை), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), புழல் (திருவள்ளூர்), பெருந்துறை (ஈரோடு), அம்பத்தூர் (திருவள்ளூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இதன் காரணமாக, அக்டோபர் 19 (இன்று) வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அக்டோபர் 19 (இன்று) வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அக்டோபர் 20 ஆம் தேதி அன்று வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அக்டோபர் 21, 22 ஆம் தேதிகளில் தெற்கு மகாராஷ்டிரா, கோவா, கர்நாடக கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அக்டோபர் 23 ஆம் தேதி அன்று தெற்கு மகாராஷ்டிரா, கோவா, கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x