உறவினருக்கு திதி கொடுக்க வந்த 2 பேர் சாயல்குடி அருகே கடலில் மூழ்கி மரணம்

உறவினருக்கு திதி கொடுக்க வந்த 2 பேர் சாயல்குடி அருகே கடலில் மூழ்கி மரணம்
Updated on
1 min read

அருப்புக்கோட்டையிலிருந்து உறவினருக்கு திதி கொடுக்க வந்த மில் தொழிலாளர்கள் இருவர் சாயல்குடி அருகே கடலில் மூழ்கி மரணமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை திருநாகரத்தைச் சேர்ந்த ராஜகுரு(43), வெள்ளக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன்(55) ஆகியோர், தங்களது உறவினருக்கு திதி கொடுப்பதற்காக ஒரு பேருந்தில் 60 பேருடன் அருப்புக்கோட்டையிலிருந்து, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள மாரியூர் கடற்கரைக்கு இன்று காலை வந்தனர்.

திதி கொடுத்துவிட்டு கடலில் குளிக்கும்போது ராஜகுரு, கார்த்திகேயன், புளியம்பட்டியைச் சேர்ந்த கருப்புச்சாமி மகன் ராஜ்குமார்(20) ஆகியோர் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர்.

உடன் குளித்தவர்கள் 3 பேரையும் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். பின்னர் மயக்கநிலையில் இருந்த 3 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ராஜகுரு, கார்த்திகேயன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதனையடுத்து அவர்களது உடல்களை உடற்கூறு ஆய்வுக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜ்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கடல் நீரில் மூழ்கி இறந்த ராஜகுரு, கார்த்திகேயன் ஆகியோர், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் நூற்பாலையில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in