

லஞ்ச வழக்கில் சிக்கிய மாசு கட்டுப்பாட்டு வாரிய முதன்மை பொறியாளர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தாரின் வங்கி கணக்குகளை முடக்கி வைக்க வங்கி மேலாளர்களுக்கு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.
வேலூர் மண்டல மாசு கட்டுப் பாட்டு வாரியத்தின் இணை முதன்மை பொறியாளராக பணி யாற்றி வந்த பன்னீர்செல்வம் லஞ்சம் பெற்ற வழக்கில் கடந்த 13-ம் தேதி சிக்கினார். காட்பாடியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த பன்னீர்செல்வத்தின் வீட்டில் கட்டுக் கட்டாக பணம், கிலோ கணக்கில் தங்க நகைகள், வெள்ளிப்பொருட் கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்து பத்திரங்களை காவல் துறையினர் கைப்பற்றினர்.
ராணிப்பேட்டையில் உள்ள பன்னீர்செல்வம் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.3.5 கோடி பணம், 6.5 கிலோ வெள்ளிப்பொருட்கள், 3.5 கிலோ தங்க நகைகள், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அரசு கரூவூலத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
மேலும், பன்னீர் செல்வம் தனது பெயரிலும், மனைவி மற்றும் குடும்பத்தார் பெயரில் பல வங்கி களில் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகளை தொடங்கி பணப் பரிவர்த்தனையும் செய்து வந்துள் ளார். இது மட்டுமின்றி, அவருக்கு நெருக்கமானவர்களுக்கு குறைந்த வட்டியில் லட்சக்கணக்கான பணத்தை கடனாகவும் கொடுத்துள் ளது விசாரணையில் தெரியவந்துள் ளது. அதற்கான முக்கிய ஆதாரங் களை லஞ்ச ஒழிப்பு காவல் துறை யினர் கைப்பற்றியுள்ளனர். இந்த வழக்கில் டைரியில் இடம் பெற்றுள் ளவர்களிடமும் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் கூறும் போது, "வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை முதன்மை பொறியாளராக பணியாற்றிய காலத்தில் பன்னீர்செல்வம் பல வழிகளில் பணத்தை லஞ்சமாக பெற்றுள்ளார். காட்பாடி மற்றும் ராணிப்பேட்டை வீடுகளில் சோதனை நடத்தியபோது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பன்னீர்செல்வம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களில் பல ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கி குவித்துள் ளார். மேலும், அவரது பெயரிலும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் பெயரிலும் பல வங்கிகளில் கணக்கு தொடங்கியுள்ளார்.
அதன் விவரங்கள் சேரிக்கப்பட்டு வருகின்றன. சில வங்கிகளில் லாக்கர் வசதியும் உள்ளது. அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தார் வங்கி கணக்குகளை முடக்கி வைக்க அந்தந்த வங்கி மேலாளர்களுக்கு பரிந்துரை செய்துள்ளோம். லாக்கரை திறந்து பார்க்கவும் முடிவு செய்துள்ளோம்" என்றனர்.