

விழுப்புரத்தை சேர்ந்தவர் முகமது சாகுல் அமீது. பொறியியல் பிரிவில்மின்னியல் மற்றும் மின்னணுவியல் படித்துள்ள இவருக்கு ‘பெஸ்ட் அச்சீவர்ஸ்’ என ‘கலாம் புக் ஆஃப் ரெக்காட்ஸ்’ மூலம் ‘கலாம் அவார்ட்’ வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறியது: கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு இத்தொற்று ஏற்படுகிறது. அதனைத் தவிர்க்க சமூக இடைவெளி பேணுவது அவசியம்.
இதற்காக பேட்டரியில் இயங்கும் கார் ஒன்றை வடிவமைத்துஉள்ளேன். இது வைஃபையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இச்சிறிய பேட்டரி காரில் ஒரு தட்டு இணைக்கப்பட்டிருக்கும். அதில் மருந்து, உணவுகளை தொற்றாளர்களுக்கு அனுப்பி வைக்கலாம். இந்த பேட்டரி காரில் இணைக்கப்பட்டிருக்கும் கேமரா மூலம் மருத்துவர்கள் தொற்றாளர்களிடம் உரையாடலாம். இந்த கண்டுபிடிப்புக்காக கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் , ‘கலாம் அவார்ட்ஸ்’ வழங்கியுள்ளது. கரோனா காலம் என்பதால் இந்த விருதை கூரியர் மூலம் அனுப்பியுள்ளனர்.
இதற்கு முன்பு கார் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் பூனாவில் நடந்த போட்டியில் பங்கேற்றேன். மேலும் ஆஸ்திரேலியாவில் நடந்த ரோபாட்டிக்ஸ் போட்டியில் 3-வது இடம் பெற்றுள்ளேன் என்றார்.