அண்ணாமலையார் கோயிலில் அனைத்து பவுர்ணமி நாட்களிலும் ஆளில்லா விமான கண்காணிப்பு

அண்ணாமலையார் கோயிலில் அனைத்து பவுர்ணமி நாட்களிலும் ஆளில்லா விமான கண்காணிப்பு
Updated on
1 min read

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த் திகை தீபத் திருவிழா போலவே, அனைத்து பவுர்ணமி நாட்களிலும் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்புப் பணியை மேற் கொள்ள காவல் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு சுமார் 20 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள், அண்ணா மலையை கிரிவலம் வந்து வழிபடுகின்றனர். அப்போது பாது காப்புப் பணிக்கு ‘ஆளில்லா விமானம்’ பயன்படுத்தப்படுகிறது. அதன் மூலம் அண்ணாமலையார் கோயில் மற்றும் பக்தர்கள் கூட்டம் கண்காணிப்படும். அதேபோன்று அனைத்து பவுர்ணமி நாட்களிலும் ஆளில்லா விமானத்தைப் பயன் படுத்த காவல்துறை முடிவு செய் துள்ளது.

அதன்படி, முதன்முறையாக பவுர்ணமி நாளில் பாதுகாப்புப் பணிக்கு ஆளில்லா விமானம் நேற்று பயன்படுத்தப்பட்டது. 500 அடி உயரம் மற்றும் 2.5 கி.மீ. சுற்றளவுக்குப் பறக்கும் திறன் கொண்ட ஆளில்லா விமானத்தில் பொருத்தப்பட்ட அதி நவீன கேமரா மூலம் காட்சிகள் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

கட்டுப்பாட்டு அறையில் பதிவான காட்சி கள் அனைத்தும் மிக துல்லியமாக இருந்தன. அதனை காவல்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in