

சீர்மரபினர், அரைநாடோடிகள் போன்ற பழங்குடி மக்களை கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என முதல்வருக்கு கடிதம் எழுதிய பாமக தலைவர் ராமதாஸை கண்டித்து உசிலம்பட்டி பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருங்காமநல்லூர் மாயக்காள் மகளிர் நலச்சங்க நிர்வாகி அ.செல்வபிரீத்தா தலைமையில் பாமக நிறுவனர் ராமதாஸை கண்டித்து உசிலம்பட்டி பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இதுகுறித்து இச்சங்க நிர்வாகி கள் கூறியதாவது:
சாதி வாரியாகக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இதில் சீர்மரபினர், அரை நாடோடிகள் போன்ற பழங்குடி மக்களை கணக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
சாதி வாரியாக இட ஒதுக்கீடு கோரும் ராமதாஸ், சில சாதிகளை மட்டும் ஒதுக்கக்கோருவது அவர் களுக்கு இழைக்கும் துரோகம்.
இது உண்மையான சமூக நீதியை அளிக்காது. குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் நல்லது செய்ய வேண்டும் என்ற உள் நோக்கத்தோடு இத்தகைய கோரிக்கை வலியுறுத்தப்படுகிறது. இதனைக் கண்டித்து எங்கள் சங்கம் சார்பில் பூசலப்புரம், அழகு ரெட்டிபட்டி, காளப்பன்பட்டி, குமரன்பட்டி, பெருங்காமநல்லூர், பெ.கன்னியம்பட்டி, அல்லி குண்டம், பெருமாள் கோவில் பட்டி, மானூத்து, சின்னக்கட்டளை, சேடபட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.