அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: தூத்துக்குடியில் அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்

அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: தூத்துக்குடியில் அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்
Updated on
1 min read

தூத்துக்குடியில் அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதிமுகவினர் எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தூத்துக்குடி டூவிபுரம் 7-வது தெருவில் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவப் படங்களுக்கு தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி பழைய அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கும், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப் படத்துக்கும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட இணைச்செயலாளர் செரினா பாக்கியராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் சந்தனம், வசந்தாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மதிய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாநில அமைப்பு சாரா ஒட்டுனரணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாநில மருத்துவ அணி இணை செயலாளர் ராஜசேகர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வீரபாகு, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் வி.பி.செல்வகுமார், மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர் தட்டார்மடம் ஞானபிரகாசம், மாவட்ட மகளிரணி செயலாளர் குருத்தாய், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் யு.எஸ். சேகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே. பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆவின் தலைவர்:
இதேபோல் அதிமுக மாநில அமைப்புச் செயலாளரான மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை தலைமையில், அதிமுக பகுதி செயலாளர்கள் பி.சேவியர், முருகன் முன்னிலையில் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு அணிவித்து மரியாதை செலுத்தி, ட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மேலும், தூத்துக்குடி சிதம்பர நகர் 4-வது தெருவில் உள்ள மாநில அமைப்புச் செயலாளர் சி.தசெல்லபாண்டியன் அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அதிமுக நிர்வாகிகள் அமலி ராஜன், ஜெபமாலை, நட்சத்திர பேச்சாளர் எஸ்.டி.கருணாநிதி, தளபதி கே.பிச்சையா, ஜோதிமணி, பிடிஆர் ராஜகோபால், எஸ்.கே.மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in