Published : 26 Sep 2015 04:03 PM
Last Updated : 26 Sep 2015 04:03 PM

வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : முதல்வர் உத்தரவு

காட்டுப் பன்றி, காட்டு எருமை, காட்டு யானை தாக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், சித்தோடு, காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாரப்ப கவுண்டர் என்பவரின் மகன் துரைசாமி, கடந்த 1.6.2015 அன்று சத்தியமங்கலம் வட்டம், தொட்டகாஜனூர் பகுதி அருகே காட்டுப் பன்றி தாக்கியதில் பலத்த காயமடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 8.6.2015 அன்று காலமானார்.

கோவை மாவட்டம், காரமடை வனச்சரகம், மானார் பிரிவு, பில்லூர் சுற்று நெல்லித் துறை காப்புக் காடு அருகே, 4.6.2015 அன்று மஞ்சூர் எமரால்டு நேரு நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், கக்குச்சி கிராமம், திருச்சிகடி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் கனகராஜ் 5.6.2015 அன்று காட்டெருமை தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்துபோனார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை வட்டம், ராவணபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னக்கூழையன் என்பவரின் மகன் மாரியப்பன் 9.6.2015 அன்று மாவடப்பு காட்டுப் பகுதி அருகே காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் கிராமம், குசுமிகரி பகுதியைச் சேர்ந்த டோமி என்கிற செபாஸ்டின் 3.7.2015 அன்று ஸ்ரீமதுரை கிராமம் அருகே காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.

மேற்கண்ட செய்திகளை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், சேரங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஞானதிலகம் என்பவர் 16.6.2015 அன்று வீட்டினருகே கரடி தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.

காட்டுப் பன்றி தாக்கி உயிரிழந்த துரைசாமி, காட்டு எருமை தாக்கிய உயிரிழந்த கனகராஜ், காட்டு யானைகள் தாக்கி உயிரிழந்த சுப்பிரமணியம், மாரியப்பன். டோமி என்கிற செபாஸ்டின் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், கரடி தாக்கி காயடைந்த ஞானதிலகத்துக்கு ரூ.50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வனத் துறை மூலம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்'' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x