

மதுரையில் சமூக இடை வெளியைப் பின்பற்றாமல் பய ணிகளை ஏற்றிச் சென்ற 49 ஆட்டோக்கள் பறிமுதல் செய் யப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் ஆட் டோக்களில் சமூக இடை வெளியைப் பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் வாக னங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், மதுரையில் இணைப் போக்குவரத்து ஆணை யர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மதுரை செயலாக்கம், மதுரை வடக்கு, மையம், தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலு வலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாவட்டம் முழுவதும் சிறப்பு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
ஆட்டோக்கள் பறிமுதல்
இதில் 528 ஆட்டோக்களை சோதனையிடப்பட்டபோது சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் பயணிகளை ஏற்றிச் சென்ற 49 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப் பட்டன.
சமூக இடைவெளி
இதற்கிடையே, மதுரை ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமை யாளர்களுடன் வட்டாரப் போக்கு வரத்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
அப்போது ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக பயணிகளை ஏற்றக்கூடாது, கூடுதல் பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கக் கூடாது, வாகனங்களில் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும், முகக்கவசம் அணிவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என ஓட்டுநர்களிடம் கூறப்பட்டது.