புதுச்சேரியில் இன்று முதல் எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில் இன்று முதல் எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

புதுச்சேரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

இதுதொடர்பாக சென்டாக் நிர்வாகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:

நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ் இளநிலை படிப்புகளுக்கு (அரசு மற்றும் அகில இந்திய நிர்வாக ஒதுக்கீடு) சென்டாக் www.centacpuducherry.in இணைய தளத்தில் இன்று (அக். 17) முதல் வரும் 27-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் தங்களது பிரிவுகளை மாற்றிக் கொள்ளவும், புதிய மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும் இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இணையதளத் தை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in