

கடலூர், தஞ்சை, நாகை மாவட்ட பாசனத்துக்காக கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ''கடலூர், தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்கு சாகுபடிக்காக கீழணை மற்றும் வீராணம் ஏரிகளிலிருந்து தண்ணீர் திறந்து விடும்படி விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
இதை ஏற்று கீழணை, வீராணம் ஏரியி்ல் இருந்து சாகுபடிக்காக 3-ம் தேதி (இன்று) முதல் தண்ணீர் திறந்து விட நான் உத்தரவிட்டுள்ளேன். இதனால் கடலூர், தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்'' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.