Published : 17 Oct 2020 07:14 AM
Last Updated : 17 Oct 2020 07:14 AM

சட்டப்பேரவை தேர்தல் பணிகள் குறித்து மண்டலவாரியாக திமுக நிர்வாகிகளுடன் அக்.21 முதல் ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து மண்டலவாரியாக திமுக நிர்வாகிகளுடன் வரும் 21-ம் தேதிமுதல் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கி உள்ளன. முதல்வர் வேட்பாளராக தற்போதையமுதல்வர் பழனிசாமியை அறிவித்து ஆளும் அதிமுக தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத பிரதான எதிர்க்கட்சியான திமுக, இந்தத் தேர்தலில் வென்றே ஆக வேண்டும் என்று வியூகங்களை வகுத்து வருகிறது. இதற்காக கடந்த பிப்ரவரி மாதத்தில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக்நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் செய்துள்ளது.

பேரவைத் தொகுதிவாரியாக பணியாளர்களை நியமித்து தேர்தல் பணிகளை ஐ-பேக் தொடங்கியுள்ளது. தேர்தல்அறிக்கை தயாரிக்க 8 பேர் குழுவைதிமுக அமைத்துள்ளது.தொடர்ந்துமண்டல வாரியாக மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலர்கள், பொறுப்பாளர்களுடன் வரும்21-ம் தேதி முதல் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

அதன்படி 21-ம் தேதி காலை 9 மணிக்கு மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த கோவை, ஈரோடு, திருப்பூர். மாலை 4 மணிக்கு சேலம், நாமக்கல், கரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

23-ம் தேதி காலை 9 மணிக்கு தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர். மாலை 4 மணிக்கு ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டு்க்கல், மதுரை, மதுரை மாநகர். 27-ம் தேதி காலை 9 மணிக்கு கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி. மாலை4 மணிக்கு தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர்.

28-ம் தேதி காலை 9 மணிக்குவடக்கு மண்டலத்தைச் சேர்ந்த கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை. மாலை 4 மணிக்கு கல்லக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருப்பதாக, திமுக பொதுச் செயலர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பிரச்சினைகள், கூட்டணிகட்சிகளுக்கான தொகுதிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஸ்டாலின் ஆலோசிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x