ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா: பங்காரு அடிகளார் தீபம் ஏற்ற விழா தொடக்கம்

மேல்மருவத்தூரில் நவராத்திரி விழாவை பங்காரு அடிகளார் நேற்று தொடங்கி வைத்தார்.
மேல்மருவத்தூரில் நவராத்திரி விழாவை பங்காரு அடிகளார் நேற்று தொடங்கி வைத்தார்.
Updated on
1 min read

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இந்த விழாவை பங்காரு அடிகளார் அகண்ட தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார்.

விழாவையொட்டி சித்தர் பீடத்தின்நுழைவு வாயில் மற்றும் வளாகம் முழுவதும் பூக்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

அதிகாலை 2 மணிக்கு மங்கள இசையுடன் நவராத்திரி விழா தொடங்கியது. தொடர்ந்து கருவறை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

நண்பகல் 12.15 மணிக்கு பங்காரு அடிகளார் அருட்கூடத்தில் இருந்து ஈர உடையுடன் கருவறைக்குச் சென்று அம்மனுக்கு தீபாராதனை செய்தார். கருவறையில் சுயம்பு அம்மனுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த அகண்ட தீபத்தை ஏற்றி வைத்தார். தீபத்துக்கு திருஷ்டி கழிக்கப்பட்டு பின்னர் சித்தர் பீடத்தின் பிரகாரம் சுற்றி எடுத்துவரப்பட்டு கருவறையின் தென்கிழக்கு திசையில் உள்ள அக்னி மூலையில் வைக்கப்பட்டது.

பின்னர் பங்காரு அடிகளார் முக்கூட்டுஎண்ணெய் ஊற்ற பக்தர்கள் பலரும் அதில் எண்ணெய் ஊற்றி தீப ஒளியைவழிபட்டனர். பின்னர், அமாவாசை வேள்விதொடங்கியது.

இந்த நவராத்திரி விழா அக்டோபர் 26-ம் தேதிவரை நடைபெறுகிறது. இந்தவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் துணைத் தலைவர் கோ.ப.செந்தில்குமார், தேவி ரமேஷ் ஆகியோர் மேற்பார்வையில் பக்தர்கள் செய்திருந்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் சென்னை மாவட்ட சாலிகிராமம், எண்ணூர் சக்தி பீடங்கள் மற்றும் மன்றங்களைச் சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in