நெல்லையில் 6 மாதங்களுக்குப் பிறகு காணொளிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நெல்லையில் 6 மாதங்களுக்குப் பிறகு காணொளிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆறு மாதங்களுக்குப் பிறகு காணொளிக் காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று நடைபெற்றது

மாதம்தோறும் விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாமல் இருந்தது.

இந்த நிலையில் விவசாயிகளின் குறைகளைக் கேட்டறியும் வகையில் காணொளி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் இருந்து விவசாயிகள் காணொளி வாயிலாக தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போதைய சூழ்நிலையில் நன்செய் பயிருக்கான யூரியா உரத்திற்கு தட்டுப்பாடு இருப்பதாகவும் அதை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

அதேபோன்று 2016 2017 ஆம் ஆண்டு விவசாயிகள் செய்த காப்பீட்டுக்கான காப்பீட்டு தொகை இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்றும் அந்த தொகை கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றும் காணொளி வாயிலாக கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது கோரிக்கையை முன்வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in