Published : 16 Oct 2020 07:07 am

Updated : 16 Oct 2020 07:07 am

 

Published : 16 Oct 2020 07:07 AM
Last Updated : 16 Oct 2020 07:07 AM

கோயம்பேடு சந்தையில் சிறுவணிகர்கள் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

makkal-needhi-maiam

சென்னை

கோயம்பேடு சந்தையில் சிறு வணிகர்கள் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் தொழிலாளர் நல அணியின் மாநில செயலாளர் பொன்னுசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஊரடங்கு கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து வரும் நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தை மூடல், இடமாற்றம் போன்றகாரணங்களால் 2,000-க்கும் மேற்பட்ட சிறுவணிகர்கள் தொடர்ச்சியாக தொழில் நடத்த முடியாமல் அல்லல்பட்டு வருகின்றனர்.

மேலும், அவர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் சார்ந்திருக்கும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை கவனிக்கத் தவறிய தமிழக அரசு சாமானிய மக்களுக்கான அரசல்ல என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

எனவே, கோயம்பேடு காய்கறி சந்தை வளாகத்தில் 200 பெரு முதலாளிகளுக்கு மட்டுமே அனுமதி என்கிற நிலையை மாற்றி, மீதமுள்ள 2,000-க்கும் மேற்பட்ட சிறுவணிகர்கள் உடனடியாக தங்களின் கடைகளை திறந்து வணிகம்செய்ய அனுமதித்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.


கோயம்பேடு சந்தைசிறுவணிகர்கள் கடைகடைகளை திறக்க அனுமதிமக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்Makkal needhi maiam

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author