Published : 16 Oct 2020 06:58 AM
Last Updated : 16 Oct 2020 06:58 AM

மீன் வள படிப்புகளில் மீனவர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

தமிழக மீன்வளத் துறைஅமைச்சரும், மீன்வள பல்கலைக்கழக இணைவேந்தருமான டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் உறுப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் பிஎப்எஸ்சி, பிடெக் மற்றும் 4 இளநிலை தொழில்சார் படிப்புகள், பிபிஏ ஆகியவற்றில் சேருவதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் 26-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக நடைபெறும். விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 26-ம் தேதி ஆகும். பிளஸ்- 2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வருகிற 29-ம் தேதி வெளியிடப்படும்.

மீனவர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு பிரிவின்கீழ் பிஎப்எஸ்சி படிப்பில் 6 இடங்களும், மீன்வள பொறியியல் படிப்பில் 2 இடங்களும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும் 94426 01908 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x