Published : 16 Oct 2020 06:48 AM
Last Updated : 16 Oct 2020 06:48 AM

பணியாளர்களிடையே வேகமாக பரவும் கரோனா வைரஸ் தொற்று; தலைமைச் செயலகத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: துறை செயலர்களுக்கு அறிவுறுத்தல்

தலைமைச் செயலகத்தில் உள்ளபல்வேறு துறைகளின் பணியாளர்களிடையே கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கதுறைகளின் செயலர்களுக்கு பொதுத்துறை செயலர் செந்தில்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அதிகரிக்கப்பட்டு, பொது போக்குவரத்தும் தொடங்கப்பட்ட நிலையில், அரசு அலுவலகங்களில் 100 சதவீதம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

தலைமைச் செயலகத்தை பொறுத்தவரை, அனைத்து துறைஅதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை 3,500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். தற்போது அனைத்து பணியாளர்களும் பணிக்கு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மாத தொடக்கத்திலிருந்தே தலைமைச் செயலகபணியாளர்கள் மத்தியில் கரோனாவைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்கள் முன்பு வரை 200 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.நேற்று முன்தினம் கூடுதலாக 56பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பிட்ட ஒரேநாளில் 36 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தலைமைச் செயலக பணியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுடன் பணியாற்றியவர்கள், பயணித்தவர்கள், குடும்பத்தினர் என பலருக்கும்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றஅச்சத்தில் அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடந்து வருகிறது. தலைமைச் செயலகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என தெரிகிறது.

இந்நிலையில், பொதுத் துறை செயலர் செந்தில்குமார், அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தலைமைச் செயலகத்தில் பொதுத் துறை சார்பில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்துக்கு வரும் அனைத்து பணியாளர்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் தலைமைச் செயலகபிரதான கட்டிடம், நாமக்கல் கவிஞர்மாளிகையின் வாயில்கள் மற்றும் மேலும் சில இடங்களில் தானியங்கி கைகழுவும் திரவம் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பாதிப்பு தற்போது தலைமைச் செயலகத்தில் அதிகரித்து வருகிறது. எனவே,வளாகத்தில் உள்ள அனைத்து துறைகளின் செயல் அலுவலகங்களும், ஆக்ஸிஜன் அளவைசோதிக்கும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர்கருவி, உடல் வெப்பநிலை சோதிக்கும் கருவி ஆகியவற்றை தேவையான அளவில் வாங்கி சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

யாருக்கேனும் காய்ச்சல், உயர் வெப்பநிலை, சளி, இருமல், ஆக்ஸிஜன் அளவு குறைவு உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தால், அவர்களை பரிசோதித்து அடுத்த கட்ட மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இப்பணிகளை ஒவ்வொரு துறையின் சார்பு செயலர் அல்லது துணை செயலர் நிலையில் உள்ள அதிகாரிஒருவர், தினசரி கண்காணிப்புக்காக நியமிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x