Published : 04 Sep 2015 08:52 AM
Last Updated : 04 Sep 2015 08:52 AM

தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் ஆய்வை மேற்கொள்ளவில்லை: சென்னையில் ஓஎன்ஜிசி இயக்குநர் தகவல்

தமிழகத்தில் மீத்தேன் மற்றும் ஷெல் கேஸ் (பாறைகளுக்கு இடையில் உள்ள எரிவாயு) எடுக்கும் ஆய்வு எதையும் மேற்கொள்ளவில்லை என சென்னை ஓஎன்ஜிசி இயக்குநர் (ஆய்வு) ஏ.கே.திரிவேதி நேற்று தெரிவித்தார். சென்னையில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் திருவாரூர் மாவட் டத்தில் அய்யம்பேட்டை-மணக் கால், வலங்கைமான் கிராமங்களில் எண்ணெய் கண்டறியும் புவியியல் ஆய்வுப் பணிகளை ஓஎன்ஜிசி மேற்கொண்டு வருகிறது. குறைந்த அளவிலான வெடி மருந்துகளை பூமிக்குள் 30 மீட்டர் வரை செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஆய்வுப் பணிகள் முடிந்ததும் பள்ளங்கள் நிரப்பப்பட்டு பழைய நிலைக்கு கொண்டுவரப்படுகின்றன. இதன் மூலம் பூமிக்கடியில் எண்ணெய் கிடைக்கும் இடங்கள் வரைபடமாக தயாரிக்கப்படுகிறது.

பூமிக்கடியிலிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எடுப்பது தொடர்பான புள்ளி விவரங் களை சேகரிப்பதற்காக மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்று இந்த ஆய்வுப் பணிகள் நடைபெறு கின்றன. இதனால் கட்டிடங்கள் மற்றும் நிலத்தடி நீருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆய்வுப் பணியின் ஒவ்வொரு நிலையிலும் பாதுகாப்பு விதிகள் கவனமாக கடைப்பிடிக்கப்படுகின்றன.

ஓஎன்ஜிசி கடந்த 50 ஆண்டு களாக டெல்டா பகுதிகளில் இது போன்ற ஆய்வுகளை செய்து வரு கிறது. இதுவரை விவசாயத்துக்கும், நிலத்தடி நீருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. தவிர்க்க முடியாத கார ணங்களால் பாதிக்கப்பட்ட ஒரு சில பகுதிகளில் தாராளமாக நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீத்தேன் மற்றும் ஷெல் கேஸ் எடுப்பது சம்பந்த மான எவ்வித ஆய்வையும் ஓஎன்ஜிசி நேரடியாகவோ வேறு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தோ மேற்கொள்ளவில்லை. அனைத்து விதமான சட்டபூர்வ அனுமதி பெற்ற பிறகே எவ்வித ஆய்வையும் ஓஎன்ஜிசி மேற்கொள்ளும்.

மத்திய இயற்கை எரிவாயு அமைச்சகம், ஓஎன்ஜிசி ஆய்வு மேற்கொள்ளும் இடங்களில் ஷெல் கேஸ் கிடைக்கும் சாத்தியம் உள்ளதா? எனும் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் பணியை கொடுத் துள்ளது. இதன்படி காவிரி படு கையில் குத்தாலத்தில் ஓர் இடம் முதற்கட்ட சோதனைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத் தில் துரப்பண பணிகளை செய்ய மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து இன்னும் அனுமதி கிடைக்க வில்லை.

தமிழகத்தில் 31 எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிணறுகள் மூலம் நாளொன்றுக்கு 700 டன் கச்சா எண்ணெய் மற்றும் 32 லட்சம் கன மீட்டர் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படு கிறது.

இயற்கை எரிவாயு மூலம் 700 மெகா வாட் வரை மின்சாரம் கிடைக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்புகளும் உருவாகி யுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசுக்கு ராயல்டி மற்றும் மதிப்பு கூட்டு வரி, விற்பனை வரி மூலம் ஓஎன்ஜிசி ரூ.1,768 கோடி வழங்கியுள்ளது. சமுதாய வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், கட்டமைப்பு, திறன் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.16.75 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x