மூதாட்டியை ஜீவசமாதி வைக்க முயன்றதாக புகார்: அதிகாரிகள் மீட்டு சிகிச்சை

மூதாட்டியை ஜீவசமாதி வைக்க முயன்றதாக புகார்: அதிகாரிகள் மீட்டு சிகிச்சை
Updated on
1 min read

கரூர் அருகே 95 வயது மூதாட் டியை ஜீவசமாதி வைக்க முயன் றதாக புகார் வந்ததை அடுத்து, அதிகாரிகள் மூதாட்டியை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த் தனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி யைச் சேர்ந்தவர் டாக்டர் நடராஜன். இவரது தோட்ட வீடு கரூர் மாவட் டம் நொய்யல் அருகே உள்ளது. அங்கு, உமாதேவி (95) என்ற மூதாட்டியை கடந்த ஆறரை ஆண்டுகளாக டாக்டர் நடராஜன் பராமரித்து வந்துள்ளார். ‘சித்தர் பாட்டி’ என்றழைக்கப்பட்ட உமாதேவியை, சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தினமும் சந்தித்து ஆசி பெற்றுச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி அவ ரைச் சந்திக்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஈரோடு மாவட்டம் பிச்சாண்டாம்பாளையத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம், கரூர் ஆட்சியரிடம் கடந்த 7-ம் தேதி புகார் அளித்துள்ளார். அதில், சித்தர் பாட்டியை உயிருடன் ஜீவசமாதி வைக்க முயற்சிப்பதாகவும், அவரை மீட்க வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, கரூர் கோட்டாட்சியர், சமூக நல அலுவலர் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் நொய்யல் சென்று, உமா தேவியை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதற்கிடையில், டாக்டர் நடராஜன் உள்ளிட்ட சிலர் நேற்று ஆட்சியர் ஜெயந்தியிடம் அளித்த மனுவில், சித்தர் பாட்டியை அப கரித்து, அவரை வைத்துப் பணம் சம்பாதிக்க சண்முகசுந்தரம் திட்ட மிட்டுள்ளார். எனவே, சித்தர் பாட் டியை முன்புபோலவே தங்கள் பராமரிப்பில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in