Last Updated : 15 Oct, 2020 04:57 PM

 

Published : 15 Oct 2020 04:57 PM
Last Updated : 15 Oct 2020 04:57 PM

நெல்லை மாநகர காவல் நிலையங்களில் வழக்குகளில் சிக்கி பல ஆண்டுகள் ஆன இருச்சக்கர வாகனங்கள் ஏலம்

திருநெல்வேலி

நெல்லை மாநகரப் பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்கு சம்பந்தப்பட்டு நீண்ட நாட்களாக உரிமம் கோராமல் இருந்த இரு சக்கர வாகனங்களுக்கான ஏலம் நடைபெற்றது. ஏராளமானோர் கலந்துகொண்டு ஏலத்தில் பங்கேற்று இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றனர்.

நெல்லை மாநகரப் பகுதிகளில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் ஏராளமான இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பல ஆண்டுகளாக காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதேபோல் தெருக்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமம் கோராத வாகனங்களையும் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.

காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் நீண்ட நாட்களாக யாரும் உரிமம் கோராமல் இருந்து வருவதால் அந்த வாகனங்களை ஏலம் விட நெல்லை மாநகர காவல்துறை முடிவு செய்தது.இதன்படி நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் 414 இருசக்கர வாகனங்கள் ஏலம் இன்று தொடங்கியது. நாளையும் ஏலம் நடைபெறுகிறது.

நெல்லை மாநகர குற்றப் பிரிவு துணை ஆணையர் மகேஷ் குமார் தலைமையில் ஏலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டு வாகனங்களை ஏலம் எடுத்தனர்.

குறைந்தபட்சமாக ஏலத்தொகை 500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக ஒரு இரு சக்கர வாகனம் 33 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் போனது.

ஏலத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு இருசக்கர வாகனங்களில் எடுத்துச் சென்றனர். இந்த ஏலத்தில் கிடைக்கும் பணத்தை கருவூலத்தில் செலுத்த உள்ளதாக துணை ஆணையாளர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x