மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை: ராமநதி அணை மீண்டும் நிரம்பியது

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை: ராமநதி அணை மீண்டும் நிரம்பியது
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சி நிலவுகிறது. இன்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் ராமநதி அணை, குண்டாறு அணையில் தலா 35 மி.மீ. மழை பதிவானது.

அடவிநயினார் அணையில் 30 மி.மீ., கடனாநதி அணையில 22 மி.மீ., கருப்பாநதி அணையில் 19.50 மி.மீ., செங்கோட்டையில் 18 மி.மீ., தென்காசியில் 16.40 மி.மீ., ஆய்க்குடியில் 6.20 மி.மீ., சிவகிரியில் 1 மி.மீ. மழை பதிவானது.

தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குண்டாறு அணை, அடவிநயினார் அணை ஆகியவை ஏற்கெனவே நிரம்பிவிட்டதால் இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில், 84 அடி உயரம் உள்ள ராமநதி அணை மீண்டும் நிரம்பியது. இந்த ஆண்டில் 3-வது முறையாக ராமநதி அணை நிரம்பியுள்ளது. பாதுகாப்பு கருதி அணை நீர்மட்டம் 82 அடியில் நிலைநிறுத்தப்பட்டு, அணைக்கு வரும் நீர் வெளியேற்றப்பட்டது.

இதேபோல், 85 அடி உயரம் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் மூன்றேகால் அடி உயர்ந்து 80 அடியாக இருந்தது. 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 69.23 அடியாக இருந்தது. குற்றாலத்தில் 4-வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in