பெருநகர சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமத்தைப் புதுப்பிக்க டிச. 31 வரை காலக்கெடு நீட்டிப்பு: ஆணையர் அறிவிப்பு

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்: கோப்புப்படம்
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்: கோப்புப்படம்
Updated on
1 min read

பெருநகர சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமத்தைப் புதுப்பிக்க டிசம்பர் 31-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என, சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி இன்று (அக். 15) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"பெருநகர சென்னை மாநகராட்சி, வருவாய்த் துறையின் மூலம் நிறுவனங்களின் தொழில் உரிமம் 2020-2021 ஆம் நிதியாண்டில், 31.03.2020-க்குள் புதுப்பிக்க வேண்டும். கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் (Covid-19) காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தொழில் உரிமத்தை எவ்வித தண்டத்தொகையும் விதிக்கப்படாமல் புதுப்பிக்க ஏதுவாக 31.12.2020 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, நிறுவனங்கள் தங்களின் தொழில் உரிமத்தை 31.12.2020 வரை எவ்வித தண்டத்தொகையுமின்றி புதுப்பிக்கலாம் என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in