ஓட்டல் திறப்பு விழா நாளில் 10 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி: இண்டூர் அருகே குவிந்த அசைவ பிரியர்கள்

தருமபுரி மாவட்டம் இண்டூரில் ஓட்டலில் சிக்கன் பிரியாணி வாங்குவதற்காக 10 பைசாவுடன் குவிந்த அசைவப் பிரியர்கள்.
தருமபுரி மாவட்டம் இண்டூரில் ஓட்டலில் சிக்கன் பிரியாணி வாங்குவதற்காக 10 பைசாவுடன் குவிந்த அசைவப் பிரியர்கள்.
Updated on
1 min read

தருமபுரி மாவட்டம் இண்டூரில் தொடங்கப்பட்டுள்ள புதிய பிரியாணி கடையில் முதல் நாளில் பத்து பைசாவுக்கு பிரியாணி விற்றதால் கூட்டம் அலைமோதியது.

தருமபுரி மாவட்டம் பென் னாகரம் வட்டம் ஒகேனக்கல் பகுதியைச்சேர்ந்த எம்சிஏ பட்டதாரி ஒருவர், கடந்த சில ஆண்டுகளாக சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களில் மென்பொருள் நிறுவனங்களில் பணி யாற்றியுள்ளார். அவர் தற்போது தருமபுரி-பென்னாகரம் சாலை யில் உள்ள இண்டூர் பகுதியில் புதிய ஓட்டல் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த ஓட்டலை பிரபலப்படுத்தும் வகையில் தொடக்க நாளில் வாடிக்கை யாளர்களுக்கு 10 பைசாவுக்கு பிரியாணி வழங்கப் படும் என அவர் அறிவிப்பு செய்திருந்தார்.

கடை தொடக்க நாளான நேற்று, 10 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. தகவல் அறிந்த சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் கடையில் காலையிலேயே 10 பைசா நாணயங்களுடன் குவியத் தொடங்கினர். 10 பைசாவுடன் வந்த வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசையில் பிரியாணி வழங்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் 300-க்கும் அதிகமான பிரியாணியை மிகக் குறைந்த நேரத்தில் விற்பனை செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in