மலை ரயிலுக்கு இன்று வயது 112

மலை ரயிலுக்கு இன்று வயது 112
Updated on
1 min read

நீலகிரியில் 112-வது மலை ரயில் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

நீலகிரி மாவட்ட சுற்றுலாவில் முக்கிய அங்கம் வகிப்பது மலை ரயில். இந்தியாவிலேயே பல் சக்கரம் கொண்ட ஒரே ரயில் பாதை,கடந்த 1898-ம் ஆண்டு மேட்டுபாளையத்திலிருந்து குன்னூர் வரை நிறுவப்பட்டது. பின்னர் 1908-ம் ஆண்டு உதகை வரை இப்பாதை நீட்டிக்கப்பட்டது. நூற்றாண்டைக் கடந்த மலை ரயிலுக்கு,கடந்த 2004-ம் ஆண்டு ‘யுனெஸ்கோ’ நிறுவனத்தின் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டது.

குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே 16 முதல் வகுப்பு, 92 இரண்டாம் வகுப்பு முன்பதிவு இருக்கைகள், 30 சாதாரண இருக்கைகளை உள்ளடக்கிய மூன்று பெட்டிகளுடன், நீராவி இன்ஜினில் ரயில் இயக்கப்படுகிறது. குன்னூர் - உதகை இடையே 16 முதல் வகுப்பு, 19 இரண்டாம் வகுப்பு முன்பதிவு இருக்கைகள், 150 சாதாரண இருக்கைகளை உள்ளடக்கிய 5 பெட்டிகளுடன் டீசல் இன்ஜினுடன் ரயில்இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டுவர்.

கரோனாவால் சேவை நிறுத்தம்

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாககடந்த மார்ச் மாதம் 20-ம்தேதிமுதல் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. கடந்த 10-ம் தேதி முதல்தொடங்க விருந்த மலை ரயில் சேவை, நிர்வாக காரணங்களால்ஒத்தி வைக்கப்பட்டது. இது சுற்றுலாப்பயணிகளிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இன்று மலை ரயில் சேவை 112-வது ஆண்டைக் கொண்டாட உள்ளதால், குன்னூரில் நிறுத்தப்பட்டுள்ள ரயிலை சுத்தப்படுத்தும்பணியில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். மலை ரயில் சேவையை விரைந்து தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in