நடமாடும் நியாயவிலைக் கடை விற்பனை தொடக்கம்: ஆமூரில் அதிமுக, திமுகவினரிடையே தள்ளுமுள்ளு

ஆமூர் கிராமத்தில் நடமாடும் நியாயவிலைக் கடையில் விற்பனையை தொடங்கி வைத்த அதிமுகவினர்.
ஆமூர் கிராமத்தில் நடமாடும் நியாயவிலைக் கடையில் விற்பனையை தொடங்கி வைத்த அதிமுகவினர்.
Updated on
1 min read

மானாம்பதியை அடுத்த ஆமூரில் நடமாடும் நியாய விலைக் கடையில் விற்பனையை தொடங்கிவைக்க, திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏவும் மற்றும் அதிமுக மாவட்டச் செயலரும் ஒரே நேரத்தில் வந்ததால், இரு கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் நடமாடும் நியாயவிலைக் கடையில் விற்பனையை தொடங்கி வைப்பதில்அதிமுக மற்றும் திமுகவினரிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதில், திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் விற்பனையைத் தொடங்கி வைக்க வேண்டும் என திமுகவினரும், ஆளுங்கட்சியால் அறிவிக்கப்பட்ட திட்டம்என்பதால், அதிமுகவின் மாவட்டச்செயலர் மற்றும் கூட்டுறவு ஒன்றியத் தலைவரான ஆறுமுகம்தான் விற்பனையைத் தொடங்கி வைக்க வேண்டும் என அதிமுகவினரும் கருதுவதால், கிராமப் பகுதிகளில் நடைபெறும் மேற்கண்ட நிகழ்ச்சிகளில் இரு கட்சியினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், ஆமூரை அடுத்த கன்னிக்குளம் கிராமத்தில் நடமாடும் நியாயவிலைக் கடையில் விற்பனையைத் தொடங்கிவைக்க திமுக எம்எல்ஏ இதயவர்மன் தலைமையில் அக்கட்சியினர், அதிமுகவினர் ஒன்றியச் செயலர் குமரவேல், மாவட்டச் செயலர் ஆறுமுகம் தலைமையில் அக்கட்சியின் மற்றும் நிர்வாகிகள் என இரு தரப்பினரும் நேற்று ஒரே நேரத்தில் அப்பகுதியில் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத் தடுக்கும் வகையில் திமுக எம்எல்ஏவே விற்பனையைத் தொடங்கி வைக்கட்டும் என அதிமுக ஒன்றியச் செயலர் குமரவேல் தனது கட்சியினரை சமாதானப்படுத்தினார்.

இதையடுத்து திமுக எம்எல்ஏஇதயவர்மன் விற்பனையைத் தொடங்கி வைத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றவுடன், அதிமுகமாவட்டச் செயலர் ஆறுமுகம்நடமாடும் நியாயவிலைக் கடையில் விற்பனையை மீண்டும் தொடங்கி வைத்தார்.

மோதல் ஏற்படும் சூழல்

இதன் காரணமாக திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஒன்றிய பகுதிகளில் அதிமுக, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in