Published : 15 Oct 2020 07:47 AM
Last Updated : 15 Oct 2020 07:47 AM

முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவு: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் நேற்று முன்தினம் அதிகாலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நேற்று இரங்கல் தெரிவித்தனர்.

மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், தமிழக முன்னாள் ஆளுநர் கே.ரோசய்யா ஆகியோரும் முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தனர்.

சட்டப்பேரவை தலைவர் பி.தனபால், கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் அமைச்சர் முத்துச்சாமி, வீட்டுவசதி வாரிய தலைவர் பி.கே.வைரமுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பாஜகதுணைத் தலைவர் அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இதுதவிர, அரசுத் துறை செயலர்கள், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், வேலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தூத்துக்குடி ஆட்சியர்கள், தீயணைப்புத் துறை இயக்குநர் சைலேந்திரபாபு, ஏடிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி, பத்திரிகைஅதிபர்கள், பத்திரிகை, தொலைக்காட்சி ஆசிரியர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x