

கொடைக்கானலில் இருக்கும் பாதரசக் கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
கொடைக்கானல் பாதரச தொழிற்சாலை கழிவுகளை அகற்றக் கோரி ம.தி.மு.க. சார்பில் மூஞ்சிக்கல்லில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் செல்வராகவன் தலைமை வகித்தார். மதுரை மாவட்டச் செயலாளர் பூமிநாதன், தேனி மாவட்டச் செயலாளர் சந்திரன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொடைக்கானல் நகரச் செயலாளர் தாவுத் வரவேற்றார். இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது: வடமாநிலங்களில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற் சாலைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அங்கு விரட்டியடிக்கப்படும் தொழிற்சாலைகள் தமிழகத்தில் அனுமதிக்கப்படுகிறது. அவ்வாறு வெளிநாடுகளில் அனுமதி மறுக்கப்பட்ட பாதரச தொழிற்சாலை கொடைக்கானலில் தொடங்கப்பட்டது.
இந்த தொழிற்சாலை தற்போது மூடப்பட்டாலும் பாதரச தொழி ற்சாலைப் பகுதியில் இன்னும் பாதரசக் கழிவுகள் தங்கி உள்ளன. இந்த பாதரசக் கழிவுகளால் பிறக்கும் குழந்தைகள் செவித் திறன் பாதிக்கப்படுகிறது. பெண்களுக்கு குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது. பொதுமக்களுடைய நரம்பு மண்டலம், சிறுநீரகங்கள் பாதிக் கப்பட்டுள்ளன. ஞாபமறதி ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகள் மாசுபட்டுள்ளன.
கொடைக்கானலில் இருக்கும் பாதரசக் கழிவுகளை பாது காப்பாக அப்புறப்படுத்த முத ல்வர் தலையிட்டு நடவடி க்கை எடுக்க வேண்டும். அந்த தொழிற்சாலைகளில் வேலைபார்த்த முன்னாள் தொழிலாளர்கள் உடல் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இதை ஒரு கோரிக்கையாக தற்போது அரசு க்கு முன் வைக்கிறோம். அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.