Published : 02 Sep 2015 08:51 am

Updated : 02 Sep 2015 08:52 am

 

Published : 02 Sep 2015 08:51 AM
Last Updated : 02 Sep 2015 08:52 AM

கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள் இல்லாத 959 தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

959

கடந்த 4 ஆண்டுகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி இல்லாத 959 தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அ.சவுந்தரராஜன், கே.பாலபாரதி, கே.பாலகிருஷ்ணன், கே.தங்க வேல், ஏ.லாசர், ப. டில்லிபாபு, இரா.அண்ணாதுரை, க.பீம்ராவ், வி.பி.நாகைமாலி, ஆர்.ராமமூர்த்தி, தேமுதிக உறுப்பினர் சி.மைக்கேல் ராயப்பன் ஆகியோர் கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்து அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 7 காகித ஆலைகளின் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, பெரும்பகுதி நீர் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுவதால் அவை தாமிரபரணி ஆற்றில் கலப்ப தில்லை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தோல் மற்றும் சாயத் தொழிற்சாலைகள் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பூஜ்ஜிய கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகளை ஏற் படுத்தியுள்ளன. இவற்றை கண் காணிக்க சுற்றுச்சூழல் பொறி யாளர்கள் தலைமையில் 2 மாவட்ட அலுவலகங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

இதுதவிர இரவு நேரங்களிலும் இயங்கும் பறக்கும் படை அமைக்கப்பட்டு ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் 24 மணி நேரமும் தொழிற்சாலைகள் கண்காணிக்கப்படுகின்றன. இந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு மாசு படுத்தும் தொழிற்சாலைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் மாசு படுத்தியதற்காக 340 தொழிற்சாலைகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் 959 தொழிற்சாலைகள் மீது ஆலை களை மூடுதல், மின் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந் தரத் தீர்வு காண நாமக்கல் மாவட் டம் திருச்செங்கோடு வட்டம் பல் லக்காபாளையம் கிராமத்தில் 60 ஏக்கரில் குறு, சிறு சாயப்பட்டறை களை ஒருமுகப்படுத்தி தொழில் சார்ந்த வளர்ச்சிக் குழுமம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

காகித ஆலைகளில் இருந்து வெளியாகும் கழிவு நீ்ர் சுத்திகரிக் கப்பட்டு விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுவதால் நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றிலும், ஈரோடு மாவட்டத்தில் காவிரி, பவானி ஆறுகளிலும் கழிவுநீர் கலப்பதில்லை.

தாமிரபரணி ஆற்றில் 12 இடங்களிலும், ஈரோடு மாவட்டத்தில் காவிரி, பவானி ஆற்றில் 8 இடங்களிலும் மாதம் ஒருமுறை நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் 3 இடங்களில் தொடர் நீர் தர கண்காணிப்பு நிலையங்கள் கடந்த ஆகஸ்ட் முதல் செயல்பட்டு வருகிறது. அடுத்த 2 மாதங்களில் ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றில் தொடர் நீர் தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். எக்காரணம் கொண்டும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் ஆலைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது.

திருத்தம்

‘புதிய தமிழ் மென்பொருள் உரு வாக்க ரூ.25 கோடி ஒதுக்கப் படும்... அமைச்சர் முக்கூர் என்.சுப்ரமணியன் தகவல்’ என்ற தலைப்பில் நேற்று வெளி யான செய்தியில், மென்பொருள் களை உருவாக்க ரூ.25 கோடி ஒதுக்கப்படும் என்பதை ரூ.2 .5 கோடி ஒதுக்கப்படும் என்று திருத்தி வாசிக்கவும்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள்959 தொழிற்சாலைகள்தொழிற்சாலைகள் மீது நடவடிக்கைசட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author