மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலில் அனுமதியின்றி மண்டபம் கட்டும் பணி: அதிகாரிகளை மிரட்டுவதாக குற்றச்சாட்டு

மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலில் அனுமதியின்றி மண்டபம் கட்டும் பணி: அதிகாரிகளை மிரட்டுவதாக குற்றச்சாட்டு
Updated on
2 min read

மாமல்லபுரம் ஸ்தலசயன பெரு மாள் கோயிலின் ராஜகோபுர முகப்பில், தொல்லியல் மற்றும் அறநிலையத்துறை அனுமதி யின்றி தனியாரால் மண்டபம் அமைக்கும் பணி மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதுகுறித்து, கோயில் நிர்வாகம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்ல புரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோயில், இந்து அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ளது. புராதன கோயி லாக விளங்குவதால், கோயி லின் பராமரிப்புப் பணி தொல்லி யல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

கோயில் ராஜகோபுரத்தின் முகப்பு பகுதி, மண்டபம் ஏது மின்றி திறந்தவெளியாக காணப் படுகிறது. இங்கு, குலசேகர ஆழ்வார் கூடம் சார்பில் நன் கொடை வசூலித்து ரூ.10 லட்சம் மதிப்பில் 16 கால் மண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கோயில் நிர்வாகத்திடம் விண்ணப்பித்தனர். ஆனால், தொல்லியல் துறையின் அனுமதி யின்றி கட்டுமான பணிகளுக்கு ஒப்புதல் வழங்க தங்களுக்கு அதிகாரமில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துவிட்டது.

ஆனால், கோயில் நிர்வாகத் தின் அனுமதியின்றி மண்ட பத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப் பட்டது. கருங்கல், ஜல்லி, மணல் ஆகியவை கோயில் வளாகத்தில் கொட்டப்பட்டன. ராஜகோபு ரத்தின் முகப்பில் ஜே.சி.பி. மூலம் 10 அடி ஆழ பள்ளம் தோண்டி, கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, பணிகளை நிறுத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதனால், குலசேகர ஆழ்வார் கூடத்தின் தலைவர் மற்றும் சிலர், கோயிலின் செயல் அலுவலரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அனுமதி யின்றி நடைபெறும் பணிகளை நிறுத்துமாறும், கோயில் நிர்வாக அதிகாரிகளை மிரட்டுவதாகவும் மாமல்லபுரம் போலீஸில் கோயி லின் செயல் அலுவலர் அளித்தார். ஆனால், மண்டபத்தின் கட்டு மான பணிகள் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, ஸ்தலசயன பெருமாள் கோயில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன் கூறிய தாவது: கோயிலில் ஏற்கெனவே அரசு திட்டங்களான அன்னதான கூடம், பூதத்தாழ்வார் மண்டபம் அமைக்க முடிவெடுத்தும் தொல்லி யல் துறை தடையால் அந்த பணிகளே முடங்கி கிடக்கின்றன. குலசேகர ஆழ்வார் கூடத்தினர், கோயில் நிர்வாகத்தின் அனுமதி யின்றி கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்தபோது ஆட்களை வைத்து மிரட்டுகின்றனர். போலீஸில் புகார் அளித்துள்ளோம். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக் காமல் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து, குலசேரக ஆழ் வார் கூட தலைவர் கிருஷ்ணன் ராமானுஜதாசன் பாகவதர் கூறியதாவது: கோயிலுக்கு வரும் பக்தர்களும் உற்சவ காலங்களில் சுவாமியும் வெயிலில் நிற்கும் நிலை உள்ளது. இதை காரணம் காட்டி அங்கு அமைக்கப்படும் தற்காலிக பந்தலுக்கு ஏராளமான தொகை செலவிடப்படுகிறது. இதனால், நன்கொடை மூலம் நாங்கள் மண்டபம் அமைத்து வருகிறோம். கடந்த மாதம் 27-ம் தேதி கட்டுமான பணிகளுக்காக பூமி பூஜை நடந்தது.

இதில், கோயில் நிர்வாகத் தினர் அனைவரும் பங்கேற்றனர். ஆனால், தற்போது அனுமதி யில்லை என பணிகளை தடுத்து நிறுத்துவது ஏன் என தெரிய வில்லை. மாமல்லபுரம் பகுதி பொதுமக்கள் ஆதரவு தெரிவித் துள்ளதால் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து, மாமல்லபுரம் தொல்லியல் துறை பராமரிப்பு அலுவலர் ஜிலானி பாஷா தெரி வித்ததாவது: தொல்லியல் துறை யால் கட்டுமான பணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்தலசயன பெருமாள் கோயில் ராஜகோபுரத்தின் முன்பு மண்டபம் கட்டும் பணிகள் நடைபெறுவது சட்ட விரோதமானது. பணி களை நிறுத்துமாறு இந்து அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்துக்கு, தொல் லியல்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பணிகளை நிறுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றால், மாவட்ட நிர்வாகத் தின் மூலம் பணிகளை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சண்முகம் கூறியதாவது: தொல்லியல் துறை ஒப்புதல் இன்றி பணிகள் நடைபெறுவது ஏற்புடையதல்ல. கோயில் நிர்வாகம் புகார் அளித்தும் போலீ ஸார் நடவடிக்கை எடுக்கா தது குறித்து எஸ்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும். செங்கல் பட்டு கோட் டாட்சியர் மூலம் நேரில் ஆய்வு நடத்தி பணிகளை நிறுத்துவ தற்கான நடவடிக்கை எடுக்கப் படும் என்று ஆட்சியர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in