Published : 07 Sep 2015 01:24 PM
Last Updated : 07 Sep 2015 01:24 PM

மதுரையில் ஆட்டோ ஓட்டுநர் விவரங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டும் பணி தீவிரம்

ஓட்டுநர்கள், பயணிகள் இடையே சுமுக உறவு ஏற்படுத்தும் விதமாக மதுரையில் 8 ஆயிரம் ஆட்டோக்களில் ஓட்டுநர்கள் குறித்த முழு விவரங்கள் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன.

பொதுமக்கள் வசதிக்காக ஆட்டோக்களில் ஓட்டுநர், அவரது உரிமம் தொடர்பான முழு விவரங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஓட்டப்படுகின்றன. மதுரையில் சுமார் 8 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி 3 நாள்களாக நடைபெற்று வருகிறது.

மதுரையில் இப்பணியில் மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஜே.கே.பாஸ்கரன், கே.கல்யாணகுமார், எம்.சிங்கா ரவேலு மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாரிப்பாண்டி, செண்பகவள்ளி, கதிர்வேல், ராஜ் குமார், முருகன், பூர்ணலதா, மணி மாறன், சக்திவேல், பாஸ்கார் ஆகியோர் தனித்தனி குழுக்களாக ஈடுபட்டு வருகின்றனர். தெப்பகுளம் பகுதியில் நேற்று மாலை ஆட்டோக்களில் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி நடைபெற்றது. இதில் மதுரை மைய வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெ.கே.பாஸ்கரன், செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஆட்டோ ஓட்டுநர், பயணி கள் இடையே சுமுக உறவு ஏற்படுத்தும் விதமாக ஒவ் வொரு ஆட்டோக்களிலும் ஓட்டுநர், ஆட்டோ தொடர்பாக முழுமையான விபரங்கள் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப் படுகின்றன. இதனை ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்த ஸ்டிக்கரில் உள்ள விவரங்கள் கண்ணியக்குறைவாக நடந்துகொள்ளும் ஆட்டோ ஓட்டு நர்கள் மீது பயணிகள் புகார் அளிக்க உதவும். ஆட்டோக்களில் தவறவிடும் பொருள்களை மீட் கவும் உதவியாக இருக்கும். பயணிகளிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என்கிற உணர்வை ஓட்டுநர்களிடம் ஏற்படு த்தும்.

ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஓட்டும் பணி 60 சதவீதம் முடிந்துள்ளது. ஓரிரு நாளில் நூறு சதவீத ஆட்டோக்களிலும் ஸ்டிக்கர் ஒட்டப்படும். ஆட்டோ க்களை சோதனையிடும் போது இந்த ஸ்டிக்கர் இருக்க வேண்டும். ஸ்டிக்கர் இல்லா விடில் முதல் சோதனையில் எச்சரிக்கை விடப்படும். 2-வது சோதனையின்போது ஸ்டிக்கர் இல்லாவிடில், ரூ.200, 3-வது சோதனையில் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x