நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

கண்மாய் ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த திருப்பதி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை வடக்கு தாலுகா சம்பந்தர் ஆலங்குளம் சுமார் 21.20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்தக் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கில் 22 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாகவும், எஞ்சிய 8 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்தார்.

இதையடுத்து எஞ்சியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இருப்பினும் ஆக்கிரமிப்புகள் இதுவரை அகற்றப்படவில்லை. இதனால் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன் வாதிட்டார். கண்மாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பதற்கான புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதிகள், நீதிமன்றத்தை ஏமாற்றலாம் என அதிகாரிகள் நினைக்கிறீர்கள். நீதிமன்றத்தின் பல உத்தரவுகள் செயல்பாடு இல்லாமல் பேப்பர் அளவிலேயே உள்ளது.

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக இதுவரையில் எத்தனை வழக்குகள் தாக்கலாகியுள்ளன. அதில், எத்தனை வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மற்றும் கூடுதல் தலைமைப் பொறியாளர் ஆகியோர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அக்.29-க்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in