Published : 14 Oct 2020 10:46 AM
Last Updated : 14 Oct 2020 10:46 AM

சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் இணையத்தில் பதிவேற்றப்படும்: தங்கும் விடுதிகளின் விவரங்கள் வசதிகள், கட்டணங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம்

கோப்புப்படம்

திருச்சி

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நாட்டிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வரு கிறது.

நாட்டிலுள்ள ஒவ்வொரு நகரிலும் தங்குமிடங்கள், அவற்றிலுள்ள வசதிகள், கட்டணங்கள் உள்ளிட்டவற்றை சுற்றுலா பயணிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து விடுதிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சியில் மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் ஈடுபட் டுள்ளது. இதற்கான விவரங்கள் நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டு, இத்திட்டத்துக்கான பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இதன்படி திருச்சி மாவட்டத் திலுள்ள விடுதிகள் குறித்த விவரங்களை ஒருங்கிணைத்து, பதிவேற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி கூறியது:

திருச்சி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், விருந்தினர் குடியிருப்புகள் போன்றவை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து விடுதிகளும்...

எனவே திருச்சி மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகள், கிராமங்கள் உள்ளிட்ட இடங்களிலும் உள்ள அனைத்து விடுதிகள்(நட்சத்திர அந்தஸ்துடைய மற்றும் நட்சத்திர அந்தஸ்து இல்லாத) குறித்த விவரங்களையும் அவற்றின் உரிமையாளர்கள் www.hotelcloud.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்போது தங்களது விடுதிக்கான பதிவேற்ற எண் வழங்கப்படும். அந்த எண்ணை www.saathi.qcin.org என்ற இணையதள முகவரிக்குச் சென்று பதிவேற்றம் செய்தால், தங்களது விடுதி பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான சான்றிதழ் பெறலாம்.

இச்சான்றிதழை திருச்சி மாவட்ட சுற்றுலா அலுவலகத்துக்கு tourismtrichy@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

700 தங்கும் விடுதிகள்

இத்திட்டத்தின்கீழ் விடுதிகளை பதிவு செய்வதன்மூலம் சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலம் எளிதில் தங்களது தேவைக்கேற்ப அறைகளை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

இதன்மூலம் விடுதிகளுக்கும் வருவாய் கிடைக்கும். எனவே விடுதி உரிமையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

திருச்சி மாவட்டத்தில் சுமார் 700 தங்கும் விடுதிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் இதுவரை சுமார் 100 பேர் பதிவு செய்துள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x