மதுரை அருகே ஊராட்சித் தலைவர் கொலையால் உறவினர்கள் ஆத்திரம்; செயலர் வீடு மீது கல் வீச்சு: வைக்கோல் படப்புக்கு தீ வைப்பு

கிருஷ்ணன், முனியசாமி உறவினர்கள் தீ வைத்ததில் பற்றி எரியும் பால்பாண்டி வீடு அருகே இருந்த வைக்கோல் படப்பு.
கிருஷ்ணன், முனியசாமி உறவினர்கள் தீ வைத்ததில் பற்றி எரியும் பால்பாண்டி வீடு அருகே இருந்த வைக்கோல் படப்பு.
Updated on
2 min read

மதுரை அருகே குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் கிருஷ்ணன் உட்பட இரண்டு பேர் கொலையால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் ஊராட்சி செயலர் பால்பாண்டி வீடு மீது கல்வீசி தாக்கினர். வைக்கோல் படப்புக்கு தீ வைக்கப்பட்டது.

மதுரை வரிச்சியூர் அருகே உள்ள குன்னத்தூர் ஊராட்சித் தலைவராக இருந்த கிருஷ்ணன், அதே ஊராட்சியில் ஊழியராகப் பணிபுரிந்த முனியசாமி ஆகியோர் 11--ம் தேதி இரவு குத்திக் கொலை செய்யப்பட்டனர்.

கிருஷ்ணன், முனியசாமியின் உடல்கள் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு நேற்று பிற்பகல் குடும்பத்தினரிடம் ஒப்ப டைக்கப்பட்டன.

சொந்த ஊரான குன்னத்தூருக்கு வாகனங்களில் இருவரின் உடல்களும் எடுத்துச் செல்லப்பட்டன. வரிச்சியூரில் இருந்து ஊருக்குள் சென்றபோது, கொலையில் தொடர்புடைய செயலர் பால்பாண்டி வீடு மீது கிருஷ்ணன், முனியசாமி தரப்பினர் கற்களை வீசித் தாக்கினர். இதில் கூரை ஓடுகள் சேமடைந்தன. மேலும் அவரது வீட்டுக்கு அருகே இருந்த வைக்கோல் படப்புக்கும் தீ வைத்தனர்.

இதனிடையே இக்கொலை குறித்து விசாரிக்கும் கருப்பாயூரணி காவல் ஆய்வாளர் மாடசாமி தலைமையில் சார்பு ஆய்வாளர் செந்தூர்பாண்டி அடங்கிய தனிப் படை போலீஸார் கூறியது:

1988 முதல் 2000 வரை குன் னத்தூரைச் சேர்ந்த திருப்பதி என்பவர் ஊராட்சித் தலைவராக இருந்தார். அப்போது அவர் அதே ஊரைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரை ஊராட்சி செயலராக நியமித்தார். 2000-ம் ஆண்டுக்குப் பிறகு பழனியப்பன் என்பவரின் தம்பி மனைவி தலைவராக இருந்தார். இருப்பினும் செயலர் பால்பாண்டி திருப்பதிக்கு ஆதரவாகவே செயல்பட்டார். இதனால் புதுப்பட்டி ஊராட்சிக்கு பால்பாண்டி மாற்றப்பட்டார்.

2006-ல் பழனியப்பன் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த முறை திருப்பதியை போட்டியின்றி தேர்வு செய்ய விட்டுக்கொடுப்பது என அவர்களுக்குள் ஒப்பந்தம் பேசி முடிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2010 அக்.19-ம் தேதி பழனியப்பனும், அவரது மகன் சக்திவேலுவும் மோட்டார் சைக்கிளில் திருப்புவனத்துக்கு சென்றபோது, நாட்டார்மங்கலம் அருகே லாரி மோதி இருவரும் இறந்ததாகக் கூறப்பட்டது. திருப்பதி மீது பழனியப்பன் குடும்பத்தினர் சந்தேகம் அடைந் தாலும், நடவடிக்கை கோரவில்லை.

2012-ல் திருப்பதி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பால் பாண்டி மீண்டும் குன்னத்தூர் ஊராட்சிக்கு மாற்றப்பட்டார். 2016-க்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் 2019 வரை பால்பாண்டி தொடர்ந்து குன்னத்தூரில் பணிபுரிந்து வந்தார்.

2020-ல் கிருஷ்ணன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பால்பாண்டி சக்கிமங்கலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இது தொடர்பாக இருவரிடையே பிரச்சினை இருந்தது.

இதற்கிடையில், குன்னத்தூர் ஊராட்சிச் செயலர் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிக்க, கிருஷ்ணன் முயற்சித்துள்ளார். இது பால்பாண்டிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதன் எதிரொலியாக கிருஷ் ணனைக் கொலை செய்ய பால் பாண்டி திட்டம் தீட்டியதாகத் தெரி கிறது.

கிருஷ்ணன் வழக்கமாக மலைப் பகுதியில் பேசிக் கொண் டிருந்தபோது, கொலைக் கும்பல் திட்டத்தை அரங்கேற்றி விட்டு தப்பி இருக்கிறது. ஊராட்சி ஊழியர் என்ற முறையில் எப் போதும் கிருஷ்ணனுடன் இருந்த முனியசாமியையும் கும்பல் கொலை செய்துள்ளது.

இந்த இரட்டைக் கொலையில் முன்னாள் தலைவர் திருப்பதி, பால்பாண்டிக்கு தொடர்பு இருக் கலாம் எனத் தெரிவதால் அவர்கள் மீது சந்தேகத்தின்பேரில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்கள் அடிப் படையில் இவர்கள் உட்பட கொலையாளிகள் கைது செய்யப் படுவர் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in