

சிவகங்கை கொட்டகுடி தெருவைச் சேர்ந்தவர் பா.மனோகரன் (66). திமுகவைச் சேர்ந்த இவர், 1989 முதல் 1991 வரை சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அவரும், கோகலே ஹால் தெருவைச் சேர்ந்த அவரது நண்பர் தைபுதீனும் இரு சக்கர வாகனத்தில் மதுரைக்குப் புறப்பட்டனர்.
படமாத்தூர் அருகே சென்றபோது எதிரே கேரளாவில் இருந்து காய்கறி ஏற்றி வந்த மினி லாரி இவர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து பூவந்தி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த மனோகரன் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகவும், பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவரது மனைவி சாந்தி சிவகங்கை நகராட்சித் தலைவராகப் பதவி வகித்தவர்.