Published : 14 Oct 2020 07:34 AM
Last Updated : 14 Oct 2020 07:34 AM

புதிய இணையதளத்தை உருவாக்கி ஏழை மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கு உதவும் காவல் ஆணையரின் மகள்கள்

ஆன்லைன் வகுப்புக்கு தேவைப்படும் ஆண்ட்ராய்டு செல்போன் மற்றும் லேப்டாப் போன்ற உபகரணங்கள் வாங்க வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கு சென்னை காவல்ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலின் மகள்கள் உதவி செய்து வருகின்றனர்.

கரோனோவால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் வகுப்புகள் ஆன்லைனில் நடந்து வருகின்றன. ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் ஆன்லைன் வகுப்புக்கு ஆண்ட்ராய்டு செல்போன் இல்லாமல் அவதிப்படுகின்றனர். சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலின் மகள்கள் குனிஷா, அர்ஷிதா ஆகியோர் ஏழை மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் உதவி வருகின்றனர். புதிய வெப்சைட் உருவாக்கி அதன் மூலம் ஆன்லைன் வகுப்புகளுக்கு உபகரணங்கள் இல்லாத ஏழை மாணவர்களுக்கு செல்போன், டேப், லேப்டாப் வழங்கி உதவி வருகின்றனர்.

இதுகுறித்து குனிஷா கூறும்போது, “எங்கள் வீட்டில் பணிபுரியும் பெண்ணின் மகள் ஆன்லைன் வகுப்புக்கு உரிய உபகரணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். அவருக்கு எனது தாய் வினிதா, லேப்டாப் கொடுத்து உதவினார். இதைப்பார்த்து நானும் உதவ வேண்டும் என முன்வந்தேன். இதற்காக பாலசுப்பிரமணியம் என்ற தொழில்நுட்ப வல்லுநர் மூலம் www.helpchennai.org என்ற வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு லேப்டாப் மற்றும் செல்போன் தேவைப்படுபவர்கள் விண்ணப்பிக்கும் வகையிலும், அவர்களுக்கு உதவுபவர்கள் விண்ணப்பிக்கும் வகையிலும் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய உபகரணங்கள் மட்டும் அல்லாமல், பயன்படுத்தப்பட்ட லேப்டாப், செல்போன்களையும் நீங்கள் கொடுக்கலாம். அவற்றை ஏழை மாணவர்களுக்கு கொடுத்து விடுவோம். சென்னை ரோட்டரி கிளப்புடன் இணைந்து இதுவரை 100 உபகரணங்களை சேகரித்து, ஏழை மாணவர்களுக்கு கொடுத்து இருக்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x