Published : 14 Oct 2020 07:27 AM
Last Updated : 14 Oct 2020 07:27 AM

சென்னை தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 10 ஆயிரம் சதுர அடி வரை குடியிருப்புக்கு உள்ளாட்சி அமைப்புகளே திட்ட அனுமதி தரலாம்: அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் 10 ஆயிரம் சதுரஅடி வரையிலான குடியிருப்புகளுக் கான திட்ட அனுமதியை உள்ளாட்சி அமைப்புகளே வழங்கும் வகை யில் அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள்கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட் டன. அப்போது, சென்னை தவிரமற்ற பகுதிகளில், 7 ஆயிரம் சதுரஅடி வரையிலான மொத்த கட்டிடப் பரப்பு கொண்ட கட்டி டங்கள், 8 வீடுகள் கொண்ட அதே நேரம் 12 மீட்டர் உயரத்துக்கு மிகாத கட்டிடங்கள், முழுவதுமாக பார்க்கிங் உள்ள ஸ்டில்ட் தளம் உட்பட 4 தளங்கள் அல்லது தரைதளம் உட்பட 3 தளங்கள் கொண்ட கட்டிடங்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே கட்டிட திட்ட அனுமதி வழங்கலாம்.

அதேபோல, சென்னை பெருநகர எல்லைக்கு உட்பட்ட இதர உள்ளாட்சி அமைப்புகளில் 300 சதுரமீட்டர் பரப்பு மற்றும் 12 மீட்டர் உயரத்துக்கு மிகாத வணிக வளாக கட்டிடங்கள், 2 ஆயிரம் சதுரஅடி பரப்பு மற்றும் ஸ்டில்ட் தளம் உட்பட 3 தளங்கள் அல்லது தரைதளம் உட்பட 2 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிட திட்டஅனுமதிகளையும் அந்த உள்ளாட்சிகளே வழங்கலாம். இவை தவிர இதர வகை கட்டிடங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அல்லது நகர மற்றும் ஊரமைப்பு திட்டத் துறையில் அனுமதி பெற வேண்டும்.

இந்நிலையில், கட்டிடங்களுக் கான அனுமதி வழங்கும் முறையைஎளிமைப்படுத்த வேண்டும் என்றும், அனுமதி வழங்குவதற்கான வரையறையை மாற்ற வேண்டும் என்றும் இந்திய ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் சமீபத்தில் கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து அரசுக்கு நகர ஊரமைப்பு திட்டத்துறை பரிந்துரை அளித்தது.

அதில், ‘குடியிருப்பு கட்டிடத்தின் மொத்த கட்டுமானப் பரப்பு 10 ஆயிரம் சதுரஅடி மற்றும் 8 குடியிருப்பு அலகுகள், அதே நேரம் 12 மீட்டர் உயரத்துக்கு மிகாத வகையில் ஸ்டில்ட் உட்பட4 தளங்கள் அல்லது தரைதளம் உட்பட 3 தளங்கள் கொண்ட கட்டிடம் வரை உள்ளாட்சி அமைப்புகளே திட்ட அனுமதி வழங்கலாம் என்றும், வணிக வளாக கட்டிடங்களை பொருத்தவரை ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கே அனுமதி வழங்கலாம்’ என்றும் பரிந்துரைத்தது. அதை ஏற்று, சென்னை தவிர மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு அதிகாரம் வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x